Cinema

'பொன்னியின் செல்வன்' விபத்து : மணிரத்னம் மீது வழக்குப் பதிவு - வீடியோவுக்கு Peta பரிசு அறிவித்தது ஏன்?

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் படமாக எடுத்து வருகிறார். இதன் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான ஆர்வம் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, 'பொன்னியின் செல்வன்' வாசகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அண்மையில் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் பாத்திரங்களில் யார் யார் எந்தெந்த வேடங்களில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வட மாநிலங்களில் உள்ள பிரம்மாண்டமான கோட்டைகளில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் வெகுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் குதிரை ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் உரிய விசாரணை நடத்தவேண்டும் என ஐதராபாத் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் இதுகுறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குதிரைகள் பலியானது தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ அனுப்புபவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் எனவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read: ‘Money Heist 5’ ரிலீஸை முன்னிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மென்பொருள் நிறுவனம்!