சினிமா

‘Money Heist 5’ ரிலீஸை முன்னிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மென்பொருள் நிறுவனம்!

செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் Money Heist இணையத் தொடரைக் காண்பதற்காக ராஜஸ்தானில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

‘Money Heist 5’ ரிலீஸை முன்னிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மென்பொருள் நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனோ முதல் அலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டிலிருந்த சினிமா ரசிகர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வாயிலாக பரவலாக அறிமுகமானது Money Heist தொடர்.

இந்த தொடரைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ப்ரொஃபஸரை புகழ்ந்து தள்ள, ‘யார்ரா இது’ என எல்லோரும் இந்த தொடரைப் பார்க்கத் தொடங்கினர். பிறகு இந்தியா முழுவதும் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஸ்பானிஷ் தொடரான Money Heist-க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வங்கி கொள்ளையே இந்தத் தொடரின் மையக் கதை.

இந்த தொடரின் முதல் நான்கு பாகங்களை இந்திய ரசிகர்கள் கொரோனா முதல் அலையின்போதே ஒரே மூச்சாகப் பார்த்துவிட்டார்கள். இதனால் Money Heist தொடரின் ஐந்தாம் பாகத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தொடரின் ஐந்தாம் பாகம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானதிலிருந்தே Money Heist ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது. மேலும் இதன் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த VerveLogic என்ற மென்பொருள் நிறுவனம் செப்டம்பர் 3ஆம் தேதி Money Heist வெளியீட்டை முன்னிட்டு 'நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்' என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் விடுமுறை அறிவிப்பை பகிர்ந்து நெட்டிசன்கள் பலர் தங்கள் நிறுவனத்திலும் இப்படி விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories