Cinema
நாயகனாகும் பிரபல இசையமைப்பாளர்... புது ஸ்கெட்ச் போடும் 'எனிமி' படக்குழு - சினி துளிகள்!
8 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க ‘எனிமி’ படக்குழு திட்டம்!
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘எனிமி’. இதில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் வேலைகள் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகின்றன. மீதமிருக்கும் படப்பிடிப்பை முடிக்க படக்குழு விரைவில் ஹைதராபாத் புறப்பட்டு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதில் ஒரு பாடல் காட்சியும் சில பேட்ச்-அப் காட்சிகளும் படமாகவுள்ளதாம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.
சார்மி தயாரிப்பில் ஹீரோவாக எண்ட்ரியாகும் பிரபல இசையமைப்பாளர்!
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். இவர்களோடு இந்த வரிசையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் இணைய உள்ளார்.
தமிழில் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் அடுத்து நடிகை சார்மி தயாரிக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தை தயாரித்து வரும் சார்மி அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!