சினிமா

தனுஷுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்; மீண்டும் கூடும் த்ரிஷ்யம் கூட்டணி - சினிமா அப்டேட்ஸ்!

தனுஷுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்; மீண்டும் கூடும் த்ரிஷ்யம் கூட்டணி - சினிமா அப்டேட்ஸ்!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாரான ஐஷ்வர்யா ராஜேஷ் படம்:

ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்க உருவாகி வரும் படம் ‘திட்டம் இரண்டு’. விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படம் சஸ்பன்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகிவருகிறது. சென்னையிலே முழுப்படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் பிஸியாக நடந்து வரும் இந்த படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதியதாக தமிழிக்கு வந்துள்ள சோனி லிவ் தளத்தில் அடுத்த மாதம் இந்த படம் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐஷ்வர்யா நடிப்பில் உருவாகி ஓடிடியில் வெளியான ‘க/பெ ரணசிங்கம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ‘திட்டம் இரண்டு’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

க்ரைம் த்ரில்லர் பட இயக்குனரோடு மீண்டும் இணையும் மோகன்லால்

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷயம் 2’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுது. இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் கூட்டணி மீண்டும் ஒரு படத்துக்கு இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘12த் மேன்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பாக ஆண்டனி பெரும்பவூர் தயாரிக்கவிருக்கும் இந்த படம் நல்ல சஸ்பன்ஸ் த்ரில்லர் கதையம்கொண்ட படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கான ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்துக்கான நடிகர், நடிகைகள் ஒப்பந்தமானதும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷுக்கு வலைவீசும் மற்றொரு தெலுங்கு தயாரிப்பாளர்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ஒரு கைப் பார்த்துவிட்ட தனுஷ் தற்போது டோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்க திட்டமிட்டுள்ளார். தெலுங்கில் முதல் படமாக சேகர் கம்முலா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் டிசம்பரில் துவங்கவிருக்கிறது. தனது 43வது பட வேலைக்காக ஹைதராபாத் சென்றுள்ள தனுஷை நேரில் சென்று சந்தித்து சேகர் கம்முலா படம் குறித்து சில விஷங்களை பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தனுஷை ஹைதராபாத்தில் சந்தித்து ஒரு படத்திற்கு கால்ஷீட் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories