Cinema
ரிலீஸுக்கு முன்பே ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த வலிமை! #ValimaiUpdate
ரிலீஸுக்கு முன்பே ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த வலிமை!
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் குறித்து இதுவரை படத்தின் தலைப்பை தவிர எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சாலையில் இறங்கி மட்டும் தான் போராட்டம் நடத்தவில்லை. மற்றபடி அவர்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்துவிட்டனர். ஆனால், படக்குழு அப்டேட் எதும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் திரையரங்கில் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகளில் ஒன்றான ‘புக் மை ஷோ’ தளத்தில் படத்தை பார்க்க ஆவலோடு இருப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. அதில் அஜித்தின் வலிமை படத்தை பார்க்க 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், வலிமை படம் அதை முறியடித்து உலகளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
‘சாணி காயிதம்’ படப்பிடிப்பில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவுக்கு எண்ட்ரியான சில காலத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்ட இவர் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடியாகிருந்தார்.
அதே போல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து நடித்து பிரபலமான நடிகையான இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவரோடு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேலைகளை துவங்கியுள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவருகிறது. தற்போது குடும்பத்தோடு ஹாலிடேவில் இருந்து வரும் செல்வராகவன் விரைவில் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!