சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைவதில் தாமதம் ஏன்? - விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்பால் அதிர்ந்த கமல்!

'விக்ரம்’ படத்தில் மற்றொரு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலதாமதவாதற்கு, விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் தான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

‘விக்ரம்’ படத்தில் இணைவதில் தாமதம் ஏன்? - விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்பால் அதிர்ந்த கமல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கமலோடு நடிக்க அதிக சம்பளம் கேட்கும் விஜய்சேதுபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்க படம் ‘விக்ரம்’. விரைவில் துவங்கவிருக்கும் இந்தp படத்திற்கான ஷுட்டிங்கின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்திற்காக ரெஸ்டாரன்ட் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 70 சதவீத ஷூட்டிங் அந்த செட்டில் தான் நடைபெற உள்ளது.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான மேக்கப் டெஸ்ட் கூட சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் நரேன் வயதான தோற்றத்தில் இருக்கும் லுக் இணையத்தில் வைரலானது. இந்தக் கதையில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் மற்றொரு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக பரவலாக பேசப்பட்டது, ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கு விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் தான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆம், கமலுக்கு வில்லனாக நடிக்க 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் விஜய் சேதுபதி, இதைக் கேட்ட ராஜ்கமல் நிறுவனம் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், இயக்குனர் லோகேஷ் விஜய் சேதுபதி நிச்சயம் கதைக்கு தேவை என கூறியுள்ளதால் இந்த சம்பளம் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் இணைவதில் தாமதம் ஏன்? - விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்பால் அதிர்ந்த கமல்!

‘டெடி 2’ படத்திற்கு முன் வேறு கதைக்காக இணையும் ஆர்யா - சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி!

சிபிராஜுடன் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜெயம் ரவியுடன் மிருதன், டிக்டிக்டிக் என ஒரு ஹீரோவுக்கு இரண்டு படங்கள் என கொடுத்துவந்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஆர்யாவிற்கு மட்டும் மூன்று படங்கள் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்து வெளியான படம் ‘டெடி’. ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து ஆர்யா - சாயிஷா ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிப்பரப்பானது ‘டெடி’. அதிலும் இந்த படம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சாதனை படத்தது.

ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து ‘டெடி 2’ உருவாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது, ஆனால் அதற்கு முன் வேறொரு கதைக்காக ஆர்யா - சக்தி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பாணியில் உருவாகவிருக்கும் இந்தப் படம் ஆர்யாவை புதிய பரிமாணத்தில் காட்டும் என சொல்லப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் கழித்து இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளனர், அந்தப் படத்திற்குப் பிறகு ‘டெடி 2’ குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories