Cinema
பிரம்மாண்ட இயக்குனருடன் மீண்டும் இணையும் அனிருத்... ரசிகர்கள் உற்சாகம்!
இசையமைப்பாளர் அனிருத் கைவசம் தற்போது டாக்டர், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட், விக்ரம், இந்தியன் 2 மற்றும் தனுஷின் 44வது படம் என படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
இதில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இவரது இசையில் வெளியாகவிருக்கும் 25வது படம். மேலும், ‘இந்தியன் 2’ படம் மூலமாக முதல் முறையாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணியமைத்த இவர் அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே மீண்டும் ஷங்கரின் மற்றொரு படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவிருக்கும் பிரமாண்ட படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார், அந்தப் படத்திற்கான ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!