Cinema
'கோப்ரா'வுக்கு முன் வெளியாகும் 'சீயான் 60' முதல் மோகன்லாலுக்கு ஜோடியாகும் மீனா வரை : சினிமா துளிகள்!
நடிகர் விக்ரம் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’. இதில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியா ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, வில்லனாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்து வருகிறார்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விக்ரமின் சினிமா க்ராஃப்ட் படி ‘கோப்ரா’ அவரது 58வது படம் பொன்னியின் செல்வன் 59வது படம். ஆனால், இந்த இரண்டு படங்களுக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்புராஜின் ‘சீயான் 60’ படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
விக்ரமோடு சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை குறுகிய காலத்தில் கார்த்திக் சுப்புராஜ் எடுக்க திட்டமிட்டுள்ளதாலும், கோப்ரா படம் கிராஃபிக்ஸ் வேலைகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாலும் இந்தப் படம் முன்னதாகவே வெளியாகும் என கருதப்படுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்கவிருக்கும் ‘சூர்யா 40’ ஷூட்டிங்
‘சிங்கம்’ படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது கடைசியாக வெளியான ‘சூரரைப் போற்று’ படம் தான். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருந்தது, அதனைத்தொடர்ந்து சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து துவங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு நடிகர் சூர்யா வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணையவுள்ளார்.
மீண்டும் மலையாள படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாகும் மீனா
தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்துள்ள மலையாள நடிகர் மோகன்லால் அடுத்து பிரபல நடிகர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆரம்பக்காலங்களில் சினிமா துறையில் இணை இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் நடிகராகவும் முத்திரை பதித்தார்.
பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ எனும் தலைப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் அந்தப் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரித்விராஜ் இயக்கத்தில் காமெடி ட்ராமாவாக உருவாகவிருக்கும் ‘ப்ரோ டாடி’ எனும் படத்திற்காக இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
இந்தப் படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது, இதில் நடிகை மீனா, மோகன்லால் மனைவியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய படங்கள் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!