Cinema
பேத்திக்கு முன் குழந்தையாகவே மாறிய இசைஞானி இளையராஜா... வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இசைக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இசையின் கடவுள் என அவரை வழிபடும் ரசிகர் கூட்டம் இங்கு அதிகம்.
சினிமாவிலும் சரி, பொது வாழ்விலும் சரி இளையராஜா என்றாலே மரியாதைக்குரியவர் என எல்லோரும் ஒரு இடைவெளிவிட்டே அவருடன் பழகுவார்கள். ஆனால் அவரையே அதட்டி உருட்டும் ஒரு நபர் உண்டு. வேறு யாரும் அல்ல, அவரது பேத்தி ஸியா (யுவன் ஷங்கர் ராஜாவின் மகள்).
இதற்கு முன்பு ஒரு மேடை நிகழ்வில் கூட இளையராஜா முன்பு கொஞ்சிக் கொஞ்சி பேசும் ஸியாவின் வீடியோ மிகப் பிரபலமான ஒன்று. அடிக்கடி ஸியா - இளையராஜாவின் அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும். "எந்தப் பாட்டு போட்டாலும், அதுல அப்பாவோட (இளையராஜா) பாட்டு இருந்தா, உடனே தாத்தா பாட்டு தாத்தா பாட்டுனு கண்டு பிடிச்சு சொல்றா" என ஸியா பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.
இப்போது யுவன், முகநூலில் பதிவிட்டிருக்கும் க்யூட் வீடியோ ஒன்று லேட்டஸ்டாக வைரலாகி வருகிறது. ஸியா ப்யானோ முன்பு அமர்ந்திருக்க, அவரது கவனத்தைக் கவரும் வகையில் இளையராஜா பியானோ வாசிக்கும் சில நொடிகளே ஒடும் வீடியோ அது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!