சினிமா

கொரோனா காரணமாக இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு? - மீளாத் துயரில் தமிழ் திரையுலகம்!

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த உயிரிழந்தார்.

கொரோனா காரணமாக இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு? - மீளாத் துயரில் தமிழ் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இதழியல் துறையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்வை தொடங்கிய கே.வி.ஆனந்த் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் கொடிக்கட்டி பறந்தவர்.

தமிழில் காதல் தேசம் படத்தின் மூலமும், மலையாத்தில் தேன்மாவின் கொம்பத்து படம் மூலமும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். தேன்மாவின் கொம்பத்து படத்துக்காக தேசிய விருது பெற்றிருந்தார். முன்பு இந்திய சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தார் கே.வி. ஆனந்த்.

ஒளிப்பதிவாளராக முதல்வன், பாய்ஸ், சிவாஜி, நாயக், மின்னாரம், புன்ய பூமி நா தேசம் என மற்ற இந்திய மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அயன், கோ, மாற்றான், காப்பான், அநேகன், கவண் உட்பட பல வெற்றி படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

கொரோனா காரணமாக இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவு? - மீளாத் துயரில் தமிழ் திரையுலகம்!

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி உடல்நிலை தொந்தரவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இயக்குநர் கே.வி. ஆனந்த உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

அவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ், அல்லு அர்ஜூன், ப்ரித்திவி ராஜ், சந்தோஷ் சிவன், இமான், கார்த்திக் சுப்புராஜ் என ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, கடந்த ஆண்டு பாடகர் எஸ்.பி.பி ஆகியோரின் உயிரிழப்பில் இருந்தே மீளாத தமிழ் சினிமா தற்போது கே.வி.ஆனந்தின் மறைவால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மேலும், மறைந்த கே.வி.ஆனந்துக்கு கொரோனா பாசிடிவ் இருப்பது உறுதியானதால் அவரது உடல் நேரடியாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories