Cinema
விட்டதைப் பிடித்த இளசுகளின் நாயகி... ‘விஜய் 65’ல் விஜய்க்கு ஜோடியாகிறார் நயன் 2.0?
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் எந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறதோ அதைவிட அதிகமான எதிர்பார்ப்பு அவரது 65வது படத்துக்கு உள்ளது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கான மவுசு ‘விஜய் 65’க்கு உருவாகியுள்ளது.
‘பிகில்’ படம் வெளியான சில நாட்களிலேயே மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கத் தொடங்கினார் விஜய். ஆனால், மாஸ்டர் முடிவடைவதற்கு முன்பே அவரது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் வேலைகளில் இறங்கியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அட்லீ, லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், மகிழ் திருமேனி, கார்த்திக் தங்கவேல் உள்ளிட்ட பலரது பெயர்கள் விஜய் 65க்கான இயக்குநராக அடிபட்டது. ஆனால், ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் கதை மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல், அவரது ‘சூரரைப் போற்று’ படத்தை பார்த்தபிறகு சுதாவையே தனது அடுத்த படத்துக்கு லாக் செய்துள்ளாராம்.
விஜய் 65 படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், படத்திற்காக நாயகி உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களுக்கான தேடல் படலம் நடைபெற்று வருகிறது.
Also Read: மீண்டும் ‘மாஸ்டர்’ ஃபார்முலாவை பின்பற்றிய விஜய் : ‘விஜய் 65’ படத்தை இயக்கப்போவது இவர்தான்!
அதில், விஜய்க்கு ஜோடியாக இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட ‘Expression queen' ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். சினிமா உலகின் அடுத்த நயன்தாரா எனவும் அவர் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ஏற்கெனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை அணுகியபோது, கால்ஷீட் கிடைக்காமல் போனதால் அதில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கார். ஆனால், விட்டதைப் பிடிக்கும் விதமாக விஜய் 65க்கு உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவுக்கே 50 படங்கள் நடித்த பிறகுதான் அவரது சம்பளம் 5 கோடிக்கு உயர்ந்தது. ஆனால், ராஷ்மிகா இப்போதே சுமார் 4 கோடி சம்பளமாக பெறுவது வாய்பிளக்க வைத்துள்ளது.
தற்போது ராஷ்மிகா, கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். ‘மாஸ்டர்’ வெளிவந்ததும் சூட்டோடு சூட்டாக விஜய் 65க்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!