Cinema
ஷங்கர், மகிழ் திருமேனி ஆகியோரோடு போட்டியில் இணைந்த இளம் இயக்குநர் : ‘விஜய் 65’ லேட்டஸ்ட் அப்டேட்!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறதோ அதே அளவுக்கு அவருடைய 65வது படத்துக்கும் இருந்து வருகிறது.
விஜய் 65 படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ள நிலையில் அந்தப் படத்தை யார் இயக்கவுள்ளார் என்ற கேள்வியே தற்போது கோலிவுட்டில் எழுந்துள்ளது.
ஏற்கெனவே ஷங்கர், மகிழ் திருமேனி, ஏ.ஆர்.முருகதாஸ் என பலரது பெயர்கள் அடிப்பட்டாலும் இதுவரையில் விஜய் 65க்கான இயக்குநர் யார் என்பது உறுதியாகாமல் உள்ளது.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் விஜய்யிடம் அதிரடியான ஆக்ஷன் படத்துக்கான கதையை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய்யின் அடுத்த படத்துக்கான இயக்குநர் யார் என்னும் கேள்வியோடு விஜய் 65 படத்தை இயக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!