Cinema
சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்தார் வெற்றிமாறன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய ‘அசுரன்’ திரைப்படத்திற்குப் பின்னர், அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியானது.
அப்படித்தான், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, விஜய்யுடன் வெற்றிமாறன் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது. முன்னதாக, வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கவிருக்கும் படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி உள்ளிட்டோரை வைத்து வெற்றிமாறன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வந்ததால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 40வது படத்தை இயக்குகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தை வி க்ரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இந்தக் கூட்டணி குறித்த செய்தி, சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!