சினிமா

சூரியை வைத்து இயக்கும் படத்துக்கு முன்னால் பிரகாஷ்ராஜை இயக்கவிருக்கும் வெற்றிமாறன்! - பரபரப்பு தகவல்!

‘அசுரன்’ படத்துக்குப் பிறகு சூரியை வைத்து படமெடுக்க இருந்த வெற்றிமாறன் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார்.

சூரியை வைத்து இயக்கும் படத்துக்கு முன்னால் பிரகாஷ்ராஜை இயக்கவிருக்கும் வெற்றிமாறன்! - பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 4வது முறையாக உருவாகி அண்மையில் வெளியான படம் ‘அசுரன்’. தனுஷ் நடித்த படத்திலேயே சுமார் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை அசுரன் பெற்றுள்ளது.

இதற்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக பல முன்னணி நடிகர்கள் போட்டிபோடுகின்றனர். பாலிவுட்டிலும் அசுரன் பிரபலமடைய, ஷாருக்கானே முன்வந்து இந்தி ரீமேக்கில் எடுக்க வெற்றிமாறனை கேட்டுள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால், அசுரன் படம் வெளியாவதற்கு முன்பே காமெடி நடிகர் சூரியை வைத்து படம் இயக்க வெற்றிமாறன் கமிட்டாகிவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டதால் முன்னணி நடிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சூரியை வைத்து இயக்கும் படத்துக்கு முன்னால் பிரகாஷ்ராஜை இயக்கவிருக்கும் வெற்றிமாறன்! - பரபரப்பு தகவல்!

இந்த நிலையில், சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படமும் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஏனெனில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெற்றிமாறன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதால் சூரியுடனான படத்தின் பணிகள் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்தாலஜி பாணியில் பல இயக்குநர்கள் இணைந்து வெப் சீரிஸை உருவாக்கவுள்ளனர். இதில் கவுதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகிய இயக்குநர்களுடன் வெற்றிமாறனும் ஒரு பகுதியை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில், வெற்றிமாறன் எடுக்கவுள்ள பகுதியில் பிரகாஷ்ராஜும், சாய் பல்லவியும் நடிக்கவுள்ளனர் என்றும், இந்த வெப் சீரிஸ் பணிகள் முடிந்த பிறகே சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories