Cinema
சொன்னதைச் செய்த இமான் - ‘கண்ணான கண்ணே’ திருமூர்த்தி பாடிய பாடல் வெளியானது (வீடியோ)!
சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தாலும் அப்பா மகள் பாசத்தை குறிக்கும் பாடலாக இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்த ஒன்றாக இருந்தது.
இந்த பாடலை, பார்வை மாற்றுத்திறனாளியாக இருக்கும் திருமூர்த்தி பாடியது சமூக வலைதளங்கள் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பரவின.
இதனையடுத்து, திருமூர்த்தியின் திறமையை பாராட்டி, சினிமாவில் பாட வைப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் உறுதியளித்திருந்தார். அதன்படி, ஜீவா நடிப்பில் உருவாகும் சீறு படத்தில் தன் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள செவ்வந்தியே என்ற பாடலை திருமூர்த்தியை பாடவைத்துள்ளார் டி.இமான்.
தற்போது இந்த பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடியுள்ள திருமூர்த்திக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த டி.இமானுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது
எந்த இடத்தில் இருந்தாலும் திறமைக்கு என்றுமே மதிப்பு இருக்கும். இதே போல, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டால் என்ற பெண் தன்னுடைய வசீகரிக்கும் குரலால் தற்போது பாலிவுட்டின் பின்னணி பாடகியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”டெல்லியின் கண்ணசைவிற்கு ஆடும் பழனிசாமி.. இவர் தான் மக்களைக் காப்பாரா?”: அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்!
-
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!