Cinema
உறுதியானது சூர்யா - ஹரி கூட்டணி : உருவாகிறதா 'சிங்கம் 4' ? - லேட்டெஸ்ட் தகவல்!
சுதா கொங்கரா இயக்கத்திலான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்காக ஹரியுடன் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ‘ஆறு’, ‘வேல்’ மற்றும் ‘சிங்கம்’ படத்தின் 3 பாகங்கள் என 5 படங்களில் சூர்யாவும் - ஹரியும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மீண்டும் இருவரும் இணைந்தால் சிங்கம் நான்காம் பாகமாகத்தான் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் குடும்பக் கதையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: 8 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேராக மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? - லேட்டஸ்ட் அப்டேட்!
‘சூரரைப் போற்று’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் ஜனவரி மாதம் ஹரியுடனான படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா நடிக்கத் தொடங்குவார் என கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
முன்னதாக, கடந்த 6 ஆண்டுகளில் வெளியான சூர்யாவின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!