சினிமா

சிறுத்தை சிவா, கௌதம் மேனனை அடுத்து சூர்யாவுடன் இணையும் இயக்குநர் யார்? - லேட்டஸ்ட் தகவல்!

சூரரைப் போற்று படத்தை அடுத்து வரிசையாக பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.

சிறுத்தை சிவா, கௌதம் மேனனை அடுத்து சூர்யாவுடன் இணையும் இயக்குநர் யார்? - லேட்டஸ்ட் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சூரரைப் போற்று படத்தில் வரும் மாரா கதாபாத்திரத்தின் தீம் மியூசிக்கை சூர்யாவே பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இந்தப் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல், கவுதம் மேனன், ஹரி, வெற்றிமாறன் ஆகிய இயக்குநர்களின் படங்களில் சூர்யா அடுத்தடுத்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சிறுத்தை சிவா, கௌதம் மேனனை அடுத்து சூர்யாவுடன் இணையும் இயக்குநர் யார்? - லேட்டஸ்ட் தகவல்!

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருக்கிறார்.

இன்று நேற்று நாளை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கி வருகிறார் ரவிக்குமார். சூர்யாவுடனான படமும் இதே பாணியில் மாறுபட்ட கதையமைப்பில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே சூரரைப் போற்று படத்துக்காக சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், முன்னதாக வெளியான சூர்யாவின் 6 படங்களிலும் சொல்லும் அளவுக்கான வசூலோ, விமர்சனமோ கிடைக்காததால் சூரரைப் போற்று உட்பட சூர்யாவின் எதிர்வரும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே உள்ளது.

banner

Related Stories

Related Stories