சினிமா

8 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேராக மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? - லேட்டஸ்ட் அப்டேட்!

விஜயின் தளபதி 64ம், சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஒரே நாளில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேராக மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? - லேட்டஸ்ட் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இது விஜயின் 64வது படமென்பதால் தற்காலிகமாக இந்த படத்துக்கு விஜய் 64 என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்ரீமன், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் ஷூட்டிங் வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2020 ஆங்கில புத்தாண்டை ஒட்டி, விஜய் 64 ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படபிடிப்புகளும் ஜனவரிக்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

8 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேராக மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? - லேட்டஸ்ட் அப்டேட்!

ஆகையால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அநேகமாக விஜய் 64 படம் ஏப்ரல் 14 சித்திர திருநாளை முன்னிட்டு வெளிவரலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் சூரரைப் போற்று படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் படம் அடுத்த ஆண்டு சம்மரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், விஜயின் தளபதி 64, சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஒரே சமயத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் சூழலே ஏற்பட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேராக மோதுகிறது விஜய் - சூர்யா படங்கள்? - லேட்டஸ்ட் அப்டேட்!

முன்னதாக, 8 ஆண்டுகளுக்கு கடந்த 2011ல் விஜயின் வேலாயுதம், சூர்யாவின் 7ம் அறிவு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படமும் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதால் விஜய், சூர்யா படங்களோடு இந்த படமும் மோதும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறு விஜய்-சூர்யா-நயன்தாராவின் படங்கள் ஒரு சேர வெளியானால் சினிமா ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் போன்றே அமையும்.

banner

Related Stories

Related Stories