Cinema
ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் கதை திருட்டு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய ‘பிகில்’ - அதிரடி காட்டிய ஐகோர்ட்!
விஜய்யின் ‘பிகில்’ படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நிலையில், மீண்டும் கதை திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அம்ஜத் மீரான் என்ற இயக்குநர், ‘பிரேசில்’ எனும் தலைப்பில் தான் எழுதிய கதையை பயன்படுத்தியே விஜய்யின் பிகில் படம் உருவாகியிருப்பதாகவும், தன் கதையை பயன்படுத்தியதற்காக பட தயாரிப்பு நிறுவனமும், அட்லீயும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அம்ஜத் தாக்கல் செய்த மனுவில் திருத்தங்கள் உள்ளதால் புதிதாக மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு நவ.,5ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், நாளை ‘பிகில்’ ரிலீஸுக்கு சிக்கல் இல்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக, உதவி இயக்குநர் கே.பி.செல்வா ‘பிகில்’ கதை தொடர்பாக வழக்கு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!