Cinema
‘விஜய் 65’ படத்தை இயக்குவது யார்? - வெளியான தகவல் பற்றி இயக்குனர் பேரரசு விளக்கம்!
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63வது படமாக ‘பிகில்’ தயாராகி உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு ‘பிகில்’ திரைப்படம் தயாராகியுள்ளது. நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கும் நிலையில், ‘பிகில்’ தீபாவளி ரிலீஸாக திரைக்கு வருகிறது.
விஜய்யின் அடுத்த படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு பிறகு விஜய்யின் 65வது படத்தை பேரரசு இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் சினிமா கரியரில் முக்கியமான படங்களான ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய படங்களைக் கொடுத்தவர் பேரரசு என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இந்தத் தகவல் குறித்து பேரரசு விளக்கமளித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“விஜய்யின் 65வது படத்தை நான் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. அது ஒரு செய்தியாகவே கடந்து போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்தச் செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது.
நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்த செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
பேரரசுவின் இந்த அறிக்கையின் மூலம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
Also Read
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?