Cinema
‘ராமரின் பெயரால்...’ : 1992ம் ஆண்டு வெளியான ஆவணப் படத்தை திரையிட வலுக்கும் எதிர்ப்பு !
பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய 'ராம் கி நாம்' (In the name of god) ஆவணப்படம் 1992ல் தயாரிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களையும் அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத வன்முறைகள் குறித்தும் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட நடத்தப்பட்ட பிரச்சாரங்களை முன்வைத்தும் இந்த ஆவணப்படம் உருவானது.
கொல்கத்தா பிரெசிடென்ஸி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய 'ராம் கி நாம்' ஆவணப்படம் இன்று திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பிரச்னைகளை தேவையின்றி உருவாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் திரையிடல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சயான் சக்கரவர்த்தி கூறும்போது, ''பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு சமகால பிரச்னைகளை மாணவர்கள் விவாதித்துள்ளனர். கடந்த காலங்களில் இதற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.
பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பிரெசிடென்ஸி பல்கலைக்கழகம் மாணவர்களின் உரிமைகளுக்கு எப்போதும் தடை விதித்ததில்லை. ஆனால் இத்தகைய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மாணவர்கள் தேவையான உரிய அனுமதிகளை பெற்றுள்ளனரா என்பதை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது'' என்று கூறினார்.
எனினும், பல்கலைக்கழகம் அனுமதி தராத பட்சத்தில் ஆவணப்படத்தை திரையிடுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என்று மாணவர்கள் கூறுகின்றனர். இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள் கடும் தடைகளைத் தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!