Cinema
யோகிபாபுவின் உழைப்பை ஆச்சரியப்பட்டு பாராட்டிய ரஜினி!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்'. இந்த படத்தில் நடிகர் யோகிபாபுவும் நடித்து வருகிறார். தர்பார்' படத்திற்காக அவர் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவர் நடித்து முடித்துள்ள 'தர்மபிரபு' மற்றும் 'எ1' ஆகிய படங்களின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த படங்களின் டப்பிங்கை மும்பையில் வைக்க சொன்ன யோகிபாபு, 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கிடைக்கும் இடைவெளியில், டப்பிங் ஸ்டுடியோ சென்று இந்த படங்களின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். யோகிபாபுவின் கடுமையான உழைப்பை கண்ட ரஜினி, யோகி பாபுவை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவர் நிச்சயம் சினிமாத்துறையில் பெரிய ஆளாக வருவார் என்றும் கூறியுள்ளார்.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’