All Programs

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதானி மற்றும் அவரின் நிறுவனங்களுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகளை நீக்க வேண்டும் என்று டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதனை கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அதானிக்கு எதிரான சமூக ஊடக வீடியோக்களை நீக்க உத்தரவிட்டனர். அதானி வழக்கறிஞரின் வாதங்களை மட்டுமே கேட்டதோடு, எதிர்மனு தார்களின் வாதத்தை கேட்காமல் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !

அதனைத் தொடர்ந்து ரவீஸ்குமார், ரவி நாயர், பரஞ்ஜோய் குஹா உள்ளிட்ட முக்கிய செய்தியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் பதிவுகளை நீக்க ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அதானி தொடர்பான 138 வீடியோக்கள், 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே இதனை எதிர்த்து எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பரஞ்ஜாய் குஹா, ரவி நாயர், அபிர் தாஸ் குப்தா உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories