
வங்கதேச நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசினா 2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றார். அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக இருந்து வந்தார்.
ஆனால், வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும், மனித உரிமை மீறல் செயலை நடத்தியதாகவும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு மரணதண்டனை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






