உலகம்

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!

இந்திய வம்சவாளியான மம்தானியின் வெற்றியை இந்தியர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“நான் இளைஞன். நான் ஒரு இஸ்லாமியன். நான் ஒரு ஜனநாயக சோசலிசவாதி. மிக முக்கியமாக, இவை எதற்காகவும் நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. வருந்தவும் இல்லை. இந்த வெற்றியால் எரிச்சலடைபவர்கள் இன்னும் அதிகமாக புலம்பட்டும்!”

இப்படி தன்னுடைய வெற்றி ஏற்புரையில் பேசியிருக்கிறார் நியூயார்க் மேயர் சோரான் மம்தானி.

அமெரிக்க முதலாளித்துவத்தின் தலைநகராக இருக்கும் நியூயார்க் நகரத்தின் மேயராக மம்தானி வென்றிருக்கிறார். பெரும் பணக்காரர்களையும் கம்யூனிஸ்ட் என அவரை குறிப்பிட்ட ட்ரம்பின் கடுமையான எதிர் பிரச்சாரத்தையும் எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.

“இவருக்கு வாக்களித்தால் நான் நாட்டின் அதிபராக நியூயார்க்கிற்கு நிதி கொடுக்க மாட்டேன்” என நேரடியாகவே மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப். மம்தானியின் இந்த வெற்றி சர்வதேச அரசியல்வாதிகளுக்கு முக்கிய பாடமாக அமைந்திருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!

இணையதளங்களில் ‘Trump’s worst nightmare’ என மம்தானியின் வெற்றி வர்ணிக்கப்படுகிறது.

நேருவை நினைவுகூறும் நியூயார்க் மேயர்!

இந்திய வம்சவாளியான மம்தானியின் வெற்றியை இந்தியர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் இந்தியாவில் பாஜகவினர் நேருவை விமர்சித்து வரும் நிலையில் சோரான் மம்தானி, “வரலாற்றில் பழங்காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அடியெடுத்து வைத்து, பல காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த நாட்டின் ஆன்மா விடுதலை அடையும் தருணம் அரிதாக வருவதுண்டு,” என நேரு வழங்கிய இந்திய சுதந்திர உரையை நினைவுகூர்ந்து;

“இன்று நியூயார்க்குக்கு அத்தகைய தருணம் நேர்ந்திருக்கிறது!” என தன் வெற்றி உரையில் மம்தானி பேசி இருப்பது ட்ரம்போடு மோடியையும் சேர்த்து விமர்சித்திருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories