உலகம்

ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானின் நகங்கர் மாகாணம் அருகே 8 கி.மீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கத்தால் நூர்குல், சோகி, வாட்பூர், மனோகி, சபடேர் ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 622 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும்,1500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் முற்றாக உருக்குலைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

banner

Related Stories

Related Stories