தனது நாட்டின் அரசியல் கொள்கைகளுக்கு விரோதமான எண்ணம் கொண்டவர்கள் என கருதி, அமெரிக்காவுக்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துவது ஆகும்.
அமெரிக்கா முழுமைக்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் 3 லட்சம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மட்டும் 800 இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு மட்டும் 1.40 லட்சம் இந்திய மாணவர்கள் கல்விக்கான விசா பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவில் முடிவால் 3 லட்சம் இந்திய மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தோடு அமெரிக்க அதிபர் தற்போது விளையாடி வருகிறார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு அமைதிகாத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு துணிச்சலுடன் அமெரிக்க அரசுடன் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ,"இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவது பற்றி பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் முற்றிலும் அமைதி காத்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.