உலகம்

”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்” - துருக்கி அதிபர் பகிரங்க எச்சரிக்கை... பின்னணி என்ன ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளது பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்” - துருக்கி அதிபர் பகிரங்க எச்சரிக்கை... பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது

Erdogan
Erdogan

இந்த போரில் சிரியா, ஈரான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மேலும், சிரியா, ஈரான், லெபனான் ஆகியவை உதவுவதாக இஸ்ரேல் கூறி அந்த நாடுகளின் மீது சிறிய அளவிலான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளது பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், “துருக்கி வலிமையுடன் இருந்திருந்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு எதிராக இதுபோன்ற மோசமான செயல்களை செய்திருக்காது.

லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது நமது ராணுவம் நுழைந்தது போன்று இஸ்ரேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். துருக்கியின் இந்த அறிவிப்பு இஸ்ரேலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories