உலகம்

"இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 10-ல் 9 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்" - ஐ.நா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி !

இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் உள்ள 10 பேரில் ஒன்பது பேர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை கூறியுள்ளது.

"இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 10-ல் 9 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்" - ஐ.நா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

"இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 10-ல் 9 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்" - ஐ.நா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி !

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் `காசா பகுதியில் உள்ள 10 பேரில் ஒன்பது பேர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு கூறியுள்ளது.

இது குறித்து அந்த குழுவின் அறிக்கையில்,

  • காசா பகுதியில் உள்ள 10 பேரில் ஒன்பது பேர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

  • பாதுகாப்பாக இருக்கும் இடமாக கருதும் இடங்களிலிருந்து கூட மக்களை இஸ்ரேல் படைகள் வெளியேற்றுகின்றன.

  • காசா பகுதியில் செயல்பட்டுவந்த 36 மருத்துவமனைகளில் 13 மட்டுமே செயல்படுகிறது.

  • உணவு, குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் பொதுமக்கள் 6 முதல் 8 மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

  • வடக்கு காசாவில் மட்டும் 80,000 பேர் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.

  • மருத்துவ சேவையை பெற 3 கிலோமீட்டர் நடக்கவேண்டிய சூழல் உள்ளது போன்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories