உலகம்

தேர்தல் முடிவுகளால் கொண்டாட்டத்தில் இடதுசாரிகள்... வன்முறையில் வலதுசாரிகள்.. பிரான்சில் பதற்றம் !

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிகள் தோல்வியை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளால் கொண்டாட்டத்தில் இடதுசாரிகள்... வன்முறையில் வலதுசாரிகள்.. பிரான்சில் பதற்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்சுற்று வாக்குகளில், தீவிர வலதுசாரி கூட்டணியான National rally முன்னிலை பெற்றது. இடதுசாரிகள் கூட்டணியான New Popular Front இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில், இம்மானுவேல் மேக்கரானின் மையவாத கூட்டணியாக Ensemble மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக வலதுசாரி கூட்டணி வெற்றிபெற்றால் நாடு பெரும் சீரழிவை சந்திக்கும் என்றும், அதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.தொடர்ந்து இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் வெளிவந்தது.

அதில், இடதுசாரிகள் கூட்டணியான New Popular Front அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இம்மானுவேல் மேக்கரானின் Ensemble கூட்டணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.அதே நேரம் முதல் சுற்றில் முன்னிலை பெற்ற தீவிர வலதுசாரி கூட்டணியான National rally இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணிக்கு 180 இடங்களும், மையவாத கூட்டணியாக Ensemble-க்கு 159 இடங்களும், வலதுசாரி கூட்டணியான National rallyக்கு 142 இடங்களும் கிடைத்துள்ளது.

தேர்தல் முடிவுகளால் கொண்டாட்டத்தில் இடதுசாரிகள்... வன்முறையில் வலதுசாரிகள்.. பிரான்சில் பதற்றம் !

அதே நேரம் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களில் யாரும் வெற்றிபெறாத நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு புதிய பிரதமர் யார் என்பதில் சிக்கல் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகரின் Place de la République என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இடதுசாரிகளின் வெற்றியை கொண்டாடினர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தப்பட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டின் லியோன், லில்லி ஆகிய இடங்களில் பொது இடங்களில் கூடிய வலதுசாரி ஆதரவாளர்கள் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் வன்முறையில் ஈடுபட்டனர். தற்போது வரை கலவரத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடரும் கலவரங்களால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories