உலகம்

பிரிட்டன் தேர்தல் : 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி !

பிரிட்டன் தேர்தல் : 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரிட்டன் நாட்டில் நேற்று (ஜூலை 4) பொதுத்தேர்தல் நடைபெற்றது. சுமார் 650 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் முக்கிய கட்சிகளான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து 14 ஆண்டுகளாக ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த முறை யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவி வந்தது

இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மையை பிடித்து 14 ஆண்டுகளுக்கு பிறகு கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 650 தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் தேர்தல் : 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி !

மேலும் இந்த முறை ரிஷி சுனக் வரலாறு காணாத அளவு தோல்வியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதே போல் தற்போது தொழிலாளர் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

Keir Starmer
Keir Starmer

மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவை 326 தேவை. ஆனால் தற்போது வரை தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளதால் பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். பெரும்பான்மை பெற்றாலும், எந்தெந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி என்ற முழு விவரம் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைக்கவுள்ள தொழிலாளர் கட்சிக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்ட்ராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories