உலகம்

"போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தயார்" - அமெரிக்க அதிபர் அறிவிப்பு !

இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்புடன் ஒரு ஒப்பந்தத்துக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கூறியுள்ளார்.

"போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தயார்" - அமெரிக்க அதிபர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்ருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது.

அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

"போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தயார்" - அமெரிக்க அதிபர் அறிவிப்பு !

இதனிடையே இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்புடன் ஒரு ஒப்பந்தத்துக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கூறியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆறு வார காலத்திற்குள் படிப்படியாக மக்கள் மிகுந்த இடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும். இதன்மூலம் காசாவில் முழுமையான சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும்.

அதோடு சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும். இதற்கு பதிலாக தன்னிடம் உள்ள அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவேண்டும். ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டால் இந்த 6 வார காலக்கட்டத்தில் அனைத்தும் முடிவுக்கு வரும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories