உலகம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்த பிரதமர் ரிஷி சுனக் கட்சி தலைவர்கள்

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் 75-க்கும் மேற்பட தலைவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்த பிரதமர் ரிஷி சுனக் கட்சி தலைவர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டு பிரிட்டனின் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்த பிரதமர் ரிஷி சுனக் கட்சி தலைவர்கள்

இதனிடையே பதவி காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 4-ம் தேதி பிரிட்டனின் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே வெற்றிபெறும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த 75-க்கும் மேற்பட தலைவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ளனர்.

இது பிரதமர் ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் இருக்கும் சிலரே தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories