உலகம்

"இஸ்ரேலால் ஆபத்து ஏற்பட்டால் அணுக்குண்டை உருவாக்கவேண்டியிருக்கும்" - ஈரான் எச்சரிக்கை !

இஸ்ரேலால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால் அணுக்குண்டை உருவாக்க்வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"இஸ்ரேலால் ஆபத்து ஏற்பட்டால் அணுக்குண்டை உருவாக்கவேண்டியிருக்கும்" - ஈரான் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறி அதற்கு பதிலடி தரப்படும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டிருந்தது.

"இஸ்ரேலால் ஆபத்து ஏற்பட்டால் அணுக்குண்டை உருவாக்கவேண்டியிருக்கும்" - ஈரான் எச்சரிக்கை !

அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை வானில் வைத்தே அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. பின்னர் இஸ்ரேல் சார்பில் ஈரானை நோக்கி ஏவுகணைகள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், இஸ்ரேலால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால் அணுக்குண்டை உருவாக்க்கவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய ஈரான் அரசின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர்,கமல் கர்ராசி, அணுக்குண்டை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது ஈரானுக்கு இல்லை. ஆனால் இஸ்ரேலால் எங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றாலோ, எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ எங்களின் இந்த நிலைப்பாட்டை மாற்றவேண்டியிருக்கும்.

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அணு ஆயுத விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுமட்டுமின்றி யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற இரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories