உலகம்

7 பேரை கொன்று இஸ்ரேலின் தாக்குதல் : ஈரான் கொடுக்கவிருக்கும் பதிலடி என்ன தெரியுமா ?

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது இணையத்தாக்குதலை ஈரான் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

7 பேரை கொன்று இஸ்ரேலின் தாக்குதல் : ஈரான் கொடுக்கவிருக்கும் பதிலடி என்ன தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், ஹாமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானின் ஹஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

7 பேரை கொன்று இஸ்ரேலின் தாக்குதல் : ஈரான் கொடுக்கவிருக்கும் பதிலடி என்ன தெரியுமா ?

அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்னர் சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், தூதரகத்தில் இருந்த பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் எல்லை கடந்த இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது இணையத்தாக்குதலை ஈரான் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை ஜெருசலேம் தினம் என்ற பெயரில் ஈரான் அழைக்கிறது. இந்த தினத்தில் ஆண்டு தோறும் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் இஸ்ரேல் மீது இணையத்தாக்குதல் மேற்கொள்ளும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மக்கள் எச்சரிக்கையுடள் இருக்கும்படி, அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் கணக்குகள் தவிர, பொதுமக்களின் கணக்குகளின் தாக்குதலுக்குள்ளாக கூடும் என கூறப்பட்டுள்ளது .

banner

Related Stories

Related Stories