உலகம்

ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ கப்பல் மூழ்கடிப்பு : ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்... உக்ரைன் கூறியது என்ன ?

ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ கப்பல் ஒன்றை தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ கப்பல் மூழ்கடிப்பு : ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்... உக்ரைன் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.

ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ கப்பல் மூழ்கடிப்பு : ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்... உக்ரைன் கூறியது என்ன ?

ஆயுதங்களை கொண்டு ரஷ்யாவின் பல்வேறு துருப்புகளை உக்ரைன் தாக்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ கப்பல் ஒன்றை தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆயுத தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் ராணுவ கப்பலான சீசா் குனிகோவ் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

கிரீமியா திபகற்பத்தின் அலுப்கா நகருக்கு அருகே கருங்கடல் பகுதியில் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யா எந்த பதில் அறிக்கையும் வெளியிடாத நிலையில், இந்த சம்பவம் உண்மையாக இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ரஷ்ய கப்பல் ஒன்றை தாக்கி அளித்ததாக உக்ரைன் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories