உலகம்

ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம்... தரைமட்டமான கட்டடங்கள்... 8 பேர் பலியான சோகம் !

நேற்று ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வில் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம்... தரைமட்டமான கட்டடங்கள்... 8 பேர் பலியான சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நேற்று 2024-ம் ஆண்டில் முதல்நாளில் உலக மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருக்க, ஜப்பான் நாடு மட்டும் பெரும் பீதியில் இருந்தது. ஜப்பானில் நேற்று (01.01.2024) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கு, மத்திய ஜப்பானில் 5.5 முதல் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இலேசாக இருந்ததாக எண்ணிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் வகையில், தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, வீதியில் தஞ்சமடைந்தனர்.

ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம்... தரைமட்டமான கட்டடங்கள்... 8 பேர் பலியான சோகம் !

தொடர்ந்து ஹோன்ஷூ அருகே 13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளது என்றும், இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுத்து எச்சரித்து சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலை தாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கட்டுப்பாட்டு அறையை திறந்தது. மேலும் ஜப்பானில் உள்ள இந்தியர்கள், ஜப்பான் நாட்டு அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து அங்கே அடுத்தடுத்து என நேற்று ஒரே நாளில் மட்டும் 155 முறைக்கும் மேலாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. ஏறத்தாழ 1000-ற்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது. எதிர்பாராத சூழலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அந்நாடு பெரும் கலக்கத்தில் இருக்கும் நிலையில், மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம்... தரைமட்டமான கட்டடங்கள்... 8 பேர் பலியான சோகம் !

நேற்று ஏற்பட்ட இந்த தொடர் நிலநடுக்கத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. அதோடு பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கி மீட்கமுடியாமல் தவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாலை உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்துள்ளதால் சிக்கியவர்களை மீட்கமுடியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஃபுமியா கிஷிடா வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்நாட்டு மீட்புப்படையினர் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 97,000-க்கும் மேற்பட்ட மக்களை தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டத்தோடு, அவர்களை விளையாட்டு அரங்குகள், பள்ளி, உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மீட்புக்குழு பத்திரமாக அனுப்பியது.

ஒரு சில பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சோகத்திலும் பயத்திலும் உள்ளனர். அந்நாட்டு அரசு மீட்புப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் நாட்டில் சுனாமி அலை தாக்கியுள்ள நிகழ்வு உலக நாடுகள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

ஜப்பானில் ஏற்கனவே 2011-ல் 9.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டு, சுனாமி அலை தாக்கியது. இதுல சுமார் 18,500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல 2004-ல் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories