உலகம்

இஸ்ரேலுக்கு 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு !

147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு !
Miriam Alster
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு !

இந்த நிலையில், அவசரகால அடிப்படையில் 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேலின் தற்காப்புக்கான அவசிய தேவையை முன்னிட்டு வெளியுறவு செயலர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகளை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளார்.

இஸ்ரேல் எதிர்கொள்ளும் இடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவுவது அமெரிக்க தேச நலன்களில் ஒன்று. இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் கொண்டிருக்கிறது. எனவே இந்த விறபனை குறித்து பேரவைக்கு தெரியப்படுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories