உலகம்

வேறு பெண்களுடன் பேசியதால் ஆத்திரம்... வெறிநாய் கடி ஊசியால் காதலன் கண்ணில் குத்திய காதலி !

வேறு பெண்களுடன் பேசியதால் ஆத்திரம்... வெறிநாய் கடி ஊசியால் காதலன் கண்ணில் குத்திய காதலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ளது டேட் கவுன்ட்டி என்ற பகுதி. இங்கு சான்ட்ரா ஜிமினெஸ் (44) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு தனது காதலருடன் சுமார் 8 ஆண்டுகளாக ஒரு வீட்டில் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார். இந்த சூழலில் காதலன், அடிக்கடி வேறு சில பெண்களையும் பார்த்து வந்துள்ளார்.

இதனால் சான்ட்ரா, தனது காதலருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்ட போதிலும், காதலன் மற்ற பெண்களுடன் பேசி பழகி வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்றும் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பேசியுள்ளார். இதனை கண்ட சான்ட்ரா, தனது காதலனிடம் வீட்டில் வைத்து கேட்டுள்ளார்.

வேறு பெண்களுடன் பேசியதால் ஆத்திரம்... வெறிநாய் கடி ஊசியால் காதலன் கண்ணில் குத்திய காதலி !

அப்போது இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சான்ட்ரா, தனது வளர்ப்பு நாய்க்கு போடுவதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ரேபிஸ் (வெறிநாய் கடி) ஊசியை கொண்டு தனது காதலனின் வலது கண்ணில் சட்டென்று குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த காதலனை கண்டு பயத்தில், அந்த இடத்தை விட்டு சான்ட்ரா ஓடியுள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த அலைபேசி மூலம் போலீசை தொடர்பு கொண்ட காதலன் சம்பவத்தை கூறி உதவி கேட்டுள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

வேறு பெண்களுடன் பேசியதால் ஆத்திரம்... வெறிநாய் கடி ஊசியால் காதலன் கண்ணில் குத்திய காதலி !

இதனிடையே அவர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேளையில், வெளியே காரில் பதுங்கியிருந்த காதலி சான்ட்ராவையும் உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து சான்ட்ராவிடம் நடைபெற்ற விசாரணையில், அவரை தான் தாக்கவில்லை என்றும், தன்னை தானே தாக்கி கொண்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேபிஸ் ஊசியால் காதலன் கண்ணில் குத்தப்பட்ட விவகாரத்தில், காதலன் தனது பார்வையை இழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories