இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதி ஒன்று சுருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் பாத்திஹ் மேல்லனாகாபி மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர்.
அப்போது தம்பதிக்குள் இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் அறையிலிருந்த ஸ்க்ரூடிரைவ் ஒன்றை எடுத்து மனைவியை 41 முறை குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் ரத்தக்கறையுடன் அறையிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அங்குப் பெண் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் விடுதியிலிருந்து தப்பி ஓடிய கணவனைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, "மனைவி தனக்கு போதைப் பொருட்கள் கொடுத்த பின் ஏற்பட்ட சண்டையில் அவரைக் கொன்று விட்டேன் எனவும், தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும்" கூறியுள்ளார்.
ஆனால் போலிஸார் அறையில் சோதனை செய்தபோது எந்த ஒரு போதைப் பொருளுக்கான தடையமும் கிடைக்கவில்லை. இதனால் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.