இந்தியா

நான்கு வருட திருமண வாழ்க்கை - காதலித்த நபருக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்: நடந்தது என்ன?

திருமணம் நடந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு காதலித்த நபருடனே மனைவியை கணவன் சேர்த்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

நான்கு வருட திருமண வாழ்க்கை - காதலித்த நபருக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு காஜல் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் காஜல் திருமணத்திற்கு முன்பே அவர் வசித்து வந்த ஆகாபூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பிறகு காஜலுக்கு திருமணம் நடந்த பிறகும் ராஜ்குமாரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இது பற்றி கணவன் அஜய்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றவும், திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்து இது குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு காஜலின் நிலையைப் புரியவைத்துச் சம்மதிக்கவைத்துள்ளார். பின்னர் காஜலுக்கும் ராஜ்குமாரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இரு குழந்தைகளையும் தனது பராமரிப்பில் வளர்ப்பதாக ராஜ்குமார் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories