உலகம்

சர்வதேச அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம்: வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா - நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

சர்வதேச அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம்: வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா - நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

சர்வதேச அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம்: வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா - நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

முதலில் நேரடி மோதலாக தொடங்கிய இந்த போர் தற்போது பெரும்பாலும் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்களின் சோதனைகளமாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் புதிது புதிதான ஆயுதங்கள் இந்த போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின் , புர்வெஸ்ட்நிக் என்ற அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது என்றும், இந்த வகை ஆயுதங்கள் வருங்காலத்தின் தலைசிறந்த அணு ஆயுதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம்: வெளியேறுவதாக அறிவித்த ரஷ்யா - நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

மேலும், அமெரிக்கா ஏற்காத அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்று 1990ல் இருந்து அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர், தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறும் என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம்,விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்யாவின் நாடாளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது ஒருமனதாக நிறைவேறியது. பின்னர் ஷ்யாவின் நாடாளுமன்ற மேலவையிலும் இந்த மசோதாவுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததால் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ரஷ்ய அதிபர் புதினுக்கு அனுப்பப்பட்டு அவர் இதில் கையெழுத்திட்ட பின்னர் நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பு வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories