உலகம்

”நான் எப்படி இஸ்ரேலை ஆதரிப்பேன்” : இணையத்தில் வைரலாகும் நடிகை மியா கலீஃபா பதிவு!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடிகை மியா கலீஃபாவின் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

”நான் எப்படி இஸ்ரேலை ஆதரிப்பேன்” : இணையத்தில் வைரலாகும் நடிகை  மியா கலீஃபா பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இன்று நேற்று தாக்குல் நடத்தவில்லை. கிட்டத்தட்ட 20ம் நூற்றாண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது 2023ல் மீண்டும் இஸ்ரேல் தனது கொடூரமான தாக்குதலை தொடங்கியுள்ளது. இதோடு தற்போதுதான் முதல்முறையாகப் போர் அறிவிப்பையும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு 23 நாட்கள், 2012 ஆம் ஆண்டு 8 நாட்கள், 2014 ஆம் ஆண்டு 50 நாட்கள், 2021 ஆம் ஆண்டு 11 நாட்கள் என இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தையும் சிதைத்துவிட்டது.

இந்த தாக்குதல்கள் தவிர பாலஸ் தீனத்தின் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களையும் பாலஸ்தீனர்களின் வீடுகளில் கழிவு நீரைப்பீய்ச்சி அடிப்பது என மிகக் குரூரமான தாக்குதல்களையும் தொடர் நிகழ்வுகளாக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வந்தது. இதுதவிர திடீர் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப்போராடிவரும் பல ஆயிரம் பாலஸ்தீன இளைஞர்களைக் கைதும் கொலையும் செய்துள்ளது.

”நான் எப்படி இஸ்ரேலை ஆதரிப்பேன்” : இணையத்தில் வைரலாகும் நடிகை  மியா கலீஃபா பதிவு!

ஆனால் இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடும் குழுக்களைத் தீவிரவாதிகள் என சர்வதேச அளவில் முத்திரைகுத்தி வைத்துள்ளது இஸ்ரேல். இந்நிலையில்தான் நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வந்த பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களைப் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகை மியா கலீஃபா தனது சமூகவலைத்தள பதிவில், "பாலஸ்தீனத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களது பிரச்சனையைப் பார்த்த நீங்கள் இனவெறியின் தவறான பக்கத்தில் இருப்பீர்கள். காலப்போக்கில் வரலாறு அதைக் காட்டும் என தெரிவித்திருந்தார். இந்த பதிவை 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

இந்த பதிவை அடுத்து "அருவருப்பானவர்" என கூறி பலரும் மியா கலீஃபாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரித்துப் பதிவிட்டதால் அவரது வணிக ஒப்பத்தந்தை நிறுவனம் ஒன்று முறித்துக் கொண்டது. இதற்குப் பதிலடி கொடுத்த மியா கலீஃபா, "ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் என் ஆதரவு இப்போதும் எப்போதும் உண்டு. லெபனானை சேர்ந்த நான், காலனியாதிக்கத்துக்கு ஆதரவாக இருப்பேனென எப்படி முடிவு செய்தாய் முட்டாளே?" என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories