உலகம்

போலி செய்தி பரப்பிய யூடியூபர்.. 8 ஆண்டு சிறை : அதிரடி காட்டிய ரஷ்யா!

ரஷ்யாவில் போலி செய்தியைப் பரப்பிய யூடியூபருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

போலி செய்தி பரப்பிய யூடியூபர்.. 8 ஆண்டு சிறை : அதிரடி காட்டிய ரஷ்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். இளைஞரான இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது ரஷ்யாவில் நடப்பதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ரஷ்யா நெடுஞ்சாலை போலிஸார் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் போலிஸார் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரஷ்ய போலிஸார் யூடியூபர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ் கைது செய்தனர். மேலும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் குறித்து போலியான புகைப்படத்தை வெளியிட்டதால் அவரை கைது செய்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, போலிஸாரின் பழிவாங்கும் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவுக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories