உலகம்

AI-யின் அடுத்த வெர்சன்..குரல், வீடியோ என அசத்தும் ChatGPT செயலி.. பல்வேறு மொழிகளில் பேசலாம் என அறிவிப்பு

OpenAI நிறுவனம் ChatGPT செயலியில் இனி நாம் சொல்ல வருவதை குரல் மற்றும் காட்சி வழியாகவும் தெரியப்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

 AI-யின் அடுத்த வெர்சன்..குரல், வீடியோ என அசத்தும் ChatGPT செயலி.. பல்வேறு மொழிகளில் பேசலாம் என அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த Chat GPT செயலி தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் செயலிகளிலும் இலவசமாகவே தனது சேவையை வழங்கி வருகிறது.

 AI-யின் அடுத்த வெர்சன்..குரல், வீடியோ என அசத்தும் ChatGPT செயலி.. பல்வேறு மொழிகளில் பேசலாம் என அறிவிப்பு

இந்த நிலையில், OpenAI நிறுவனம் ChatGPT செயலியில் இனி நாம் சொல்ல வருவதை குரல் மற்றும் காட்சி வழியாகவும் தெரியப்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி பயனர்கள் சொல்லவிரும்பும் செய்தியை குரல் வழியாகவோ, அல்லது காட்சி வழியாகவே ChatGPT-க்கு தெரியப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் மூலம் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த வசதி ப்ளஸ் சந்தாதாரர்கள் மற்றும் நிறுவன பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டிலுமே இந்த சேவை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories