உலகம்

"நான் அமெரிக்க அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்" -இந்திய வம்சாவளி வேட்பாளர் அறிவிப்பு !

தான் அமெரிக்க அதிபரானால் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நான் அமெரிக்க அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்" -இந்திய வம்சாவளி வேட்பாளர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இது தவறு வயது முதிர்வு காரணமாக பைடன் அடிக்கடி தடுமாறி விழுவது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

"நான் அமெரிக்க அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்" -இந்திய வம்சாவளி வேட்பாளர் அறிவிப்பு !

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அதிபர் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அதே போல குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த இருவரைத் தவிர இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, விவேக் ராமசாமியும் தாங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்து தற்போதே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தான் அதிபரானால் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றுவிவேக் ராமசாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த விவேக் ராமசாமி "நான் அதிபரானால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில், 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன். மத்திய புலனாய்வு அமைப்பு, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அரசு நிறுவனங்களை மூடி விடுவேன். அரசுக்கு எதிராக கருத்துகளை கொண்டவர்களை பதவி நீக்கம் செய்து, ஒத்த எண்ணம் கொண்ட அதிகாரிகளை நியமிக்க திட்டம் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories