உலகம்

தலைக்கேறிய போதை.. சொந்த மகளை துண்டு துண்டாக்கி சமைத்த கொடூரம்.. தாய் செய்த செயலால் அதிர்ச்சி !

போதை தலைகேறியபோது, அடம்பிடித்த 9 வயது மகளை தாயே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைக்கேறிய போதை.. சொந்த மகளை துண்டு துண்டாக்கி சமைத்த கொடூரம்.. தாய் செய்த செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ரூத் ஃப்ளோரியானோ(30). இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் இவர் டேட்டிங் செயலி மூலம் ஒருவருடன் டேட் செய்து வந்துள்ளார். ஆனால் இவரது பிள்ளைகளில் 9 வயது பெண் குழந்தை சில்வா, தனக்கு தந்தை வேண்டும் என்றும், தான் தந்தையுடன் செல்கிறேன் என்றும் அடம்பிடித்து வந்துள்ளார்.

தொடர்ந்து பலமுறை அவர் தனது தந்தையை வேண்டும் என்று, தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போது எல்லாம் இவர் சமாதானபடுத்தியும் முடியாததால் வேறு வழியின்றி அடித்து வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று தாய் தனது டேட்டிங் நபருடன் டேட் செய்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் முழு போதையில் இருந்துள்ளார்.

தலைக்கேறிய போதை.. சொந்த மகளை துண்டு துண்டாக்கி சமைத்த கொடூரம்.. தாய் செய்த செயலால் அதிர்ச்சி !

அந்த சமயத்தில் இந்த சிறுமி மீண்டும் தந்தையை கேட்டு அடம்பிடித்துள்ளார். அப்போதும் சமாதானப்படுத்தியுள்ளார் தாய். இருப்பினும் சிறுமி கேட்கவில்லை என்பதால் கோபத்தில் தாக்கியுள்ளார். மேலும் சிறுமியின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் சிறுமி சுருண்டு விழுந்து இறந்தார். சிறுமி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக சடலத்தை மறைக்க எண்ணியுள்ளார்.

அதன்படி சிறுமியின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, சடலத்தை மறைப்பது குறித்து இணையதளத்தில் தேடி பார்த்து, பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்ட முடிவு செய்து அதற்காக ஹெவையான பொருட்களை கடையில் வாங்கி, அதனை வைத்தே தனது குழந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி பதப்படுத்தியுள்ளார். பின்னர், சில உடல் உறுப்புகளை சமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைக்கேறிய போதை.. சொந்த மகளை துண்டு துண்டாக்கி சமைத்த கொடூரம்.. தாய் செய்த செயலால் அதிர்ச்சி !

அங்கிருந்து துர்நாற்றம் வந்ததால் போலீசுக்கு தகவல் கிடைக்கப்பட்டு அவர்கள் நடத்திய சோதனையில் சிறுமியின் உடல் பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து தாயிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் போதையில் நடந்தது என்று வாக்குமூலம் அளித்தார். தாய் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து மீதம் அவரிடம் இருந்த 2 பிள்ளைகளையும் போலீசார் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்துள்ளனர். போதை தலைகேறியபோது, அடம்பிடித்த 9 வயது மகளை தாயே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories