அமெரிக்காவைச் சேர்ந்தவர் அன்னே என் நெல்சன் கோச் (Anne N. Nelson-Koch). 74 வயதுடைய இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2016 - 2017-ம் ஆண்டுகளில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 67. இந்த சூழலில் இவரது வகுப்பில் 14 வயது சிறுவனுடன் இவர் நெருங்கி பழகியுள்ளார். சிறுவனும் ஆசிரியர் என்ற எண்ணத்தில் பழகினார்.
ஆனால் ஆசிரியரோ சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதனை பற்றி வெளியே சொல்ல கூடாது என்று சிறுவனுக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. எனவே சிறுவனும் இதனை குறித்து வெளியே சொல்லாமல் இருந்த நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளி உள்ளே, வெளியே என சுமார் 25 முறை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து வெளியே தெரியவரவே ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த மன்றோ கவுண்டியின் (Monroe County) மாவட்ட வழக்கறிஞர் கெவின் க்ரோனிங்கர், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு 600 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும் அக்டோபர் மாதம் வெளியாகும். அதுவரையிலும் ஆசிரியர் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் 14 வயது பள்ளி சிறுவனுக்கு 25 முறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 60 வயது பெண் ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.