உலகம்

கால்வைத்தால் உடனே கைது.. பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த புதின்.. பின்னணி என்ன ?

பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்லமாட்டேன் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

கால்வைத்தால் உடனே கைது.. பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த புதின்.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது 500 நாட்களை தாண்டியும் உக்கிரமாக நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

கால்வைத்தால் உடனே கைது.. பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த புதின்.. பின்னணி என்ன ?

இதனிடையே இந்தப் போர்க் காலத்தில் ரஷ்யப் படைகள் பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளை ஐ.நா முன்வைத்திருந்தது. மேலும், உக்ரைனில் நடக்கும் போர்க் குற்றங்கள் நடப்பதாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், போர்க் குற்றங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போர்க்குற்றம் உள்ளிட்ட முக்கிய குற்றசாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் புதின் வேறு எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து உலகளவில் முக்கியமான பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் வருவாரா? அப்படி வந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி அவரை தென்னாபிரிக்க அரசு கைது செய்யுமா? செய்யாதா ? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புடின் வந்தால் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணி கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தென் ஆப்பிரிக்காவில் ரஷ்ய அதிபர் புதின் கால் வைத்தால், அவரை கைது செய்யுமாறும் தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் புதின் தென்னாப்பிரிக்காவுக்கு வருவாரா ? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது.

கால்வைத்தால் உடனே கைது.. பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த புதின்.. பின்னணி என்ன ?

இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு செல்லமாட்டேன் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபா் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா லாவ்ரோவ் பங்கேற்பாா். இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்பேன். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றிபெறும்" எனக் கூறினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்க டாலருக்கு பதில் பொதுவான நாணயம், பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் அதிக நாடுகளை இணைப்பது போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதில் நேரிடையாக பங்கேற்காதது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories