உலகம்

வெளிநாடு செல்பவர்களே உஷார்.. பாஸ்போர்ட் அழுக்காக இருந்ததால் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. நடந்தது என்ன ?

பாஸ்போர்ட் மிகவும் அழுக்காக இருந்ததால் அபராதமாக 1000 அமெரிக்க டாலர்கள் செலுத்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு செல்பவர்களே உஷார்.. பாஸ்போர்ட் அழுக்காக இருந்ததால் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..  நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நமது நாட்டில் விடுமுறையை கழிக்க ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதே கொஞ்சம் வசதியானவர்கள் என்றால் கோவா, மும்பை, சிம்லா போன்ற இடங்களுக்கு செல்வார்கள். அதே போல முன்னேறிய வெளிநாட்டினர் தங்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மோனியூ சதர்லாந்து என்ற இளம்பெண் தனது தாயுடன் பாலி நாட்டுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்காக விமான டிக்கெட் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அந்த பெண் இறுதியில் விமானம் ஏற விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

வெளிநாடு செல்பவர்களே உஷார்.. பாஸ்போர்ட் அழுக்காக இருந்ததால் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..  நடந்தது என்ன ?

அங்கு இருந்த கவுண்டரில் அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அளித்த நிலையில், அவர்களை விமான நிலைய ஊழியர்கள் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.

அப்போது, அவர்களின் பாஸ்போர்ட் மிகவும் அழுக்காக இருந்ததாகவும், இதனால் அபராதமாக 1000 அமெரிக்க டாலர்களைத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அபராதம் செலுத்த மறுத்தாலும், பின்னர் பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது என விமான நிலைய அதிகாரிகள் அச்சுறுத்தியதால் வேறு வழியின்றி அபராதத்தை செலுத்தியுள்ளார்.

அதன்பின்னரே அவ்ர்களுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள அந்த பெண், பாஸ்போட் 7 வருடம் பழமையானது என்பதால் சிறிது அழுக்காக இருந்தது. இதனால் எனக்கு அபராதம் விதித்துவிட்டனர். என்னை அவர்கள் ஏமாற்றி பணம் பறித்துவிட்டனர் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories